மயிலாப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடப்பட்டன.
சென்னை மயிலாப்பூர் தேசிகாச்சாரி தெருவில் வசிப்பவர் ராதா(80). கணவர் ராமநாதன் இறந்து விட்ட நிலையில் வீட்டில் இவர் தனியாக வசித்து வந்தார். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கடந்த 12-ம் தேதி ராதா வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போயிருந்தன.
இதுகுறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ராதா புகார் அளித்தார். போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.