மூளைச் சாவு அடைந்த அரசு பள்ளி ஆசிரியை உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. அப்பகுதியில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 19-ம் தேதி பள்ளியில் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். எதிரே வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அதன்பின் மேல்சிகிச்சைக் காக வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி சரஸ்வதி மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து கணவர் மற்றும் மகள்கள் சரஸ்வதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர். அதன்படி டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து சரஸ்வதியின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வு மற்றும் கண்களை எடுத்தனர். கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 நோயாளிகளுக்கு டாக்டர்கள் பொருத்தினர். மற் றொரு சிறுநீரகம், இதய வால்வு மற்றும் கண்கள் சென்னயில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி களுக்கு பொருத்தப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த அரசு பள்ளி ஆசிரியை உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.