தமிழகம்

குழந்தை இலக்கியத்தின் முன்னோடி திருவள்ளுவர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெருமிதம்

செய்திப்பிரிவு

எல்லாவற்றுக்கும் விளக்கம் சொன்ன திருவள்ளுவரே குழந்தை இலக்கியத்தின் முன்னோடி என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நேற்று சாகித்ய அகாடமி, தொடரும் இலக்கிய இதழ் சார்பில் தமிழில் சிறுவர் இலக்கிய இதழ்கள் குறித்த உரையரங்கம் நடந்தது.

இதில் குன்றக்குடி பொன்னம் பல அடிகளார் தலைமை வகித்துப் பேசியது:

குழந்தைகளே இலக்கியம். ஒட்டுமொத்தமாக இலக்கிய வடிவத்தில் இருக்கிற குழந்தை களை தனியாக பிரித்துப்பார்க்க இயலாது. எல்லாவற்றுக்கும் விளக்கம் சொன்ன திருவள்ளுவர் தான் குழந்தை இலக்கியத்தின் முன்னோடி.

குழந்தைகளின் நேசர் ஜவஹர்லால்நேரு. சிறைப்பட்ட காலத்தில் அவர் தனது அருமை மகளுக்கு எழுதிய கடிதம்தான் உலக வரலாறானது. அவர் அடிமனத்தின் ஆழத்தில் குழந்தை நேசராகவே இருந்தார். அதனால்தான் சட்டையின் அணிந்திருந்த ரோஜா மலரைப் போன்று குழந்தைகளை நேசித் தார். அதனால்தான் அவர் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் மலர்கள், அவர்களை ஒருபோதும் கசக்கி விடாதீர்கள். குழந்தைகள் கண்ணாடி, கண்ணாடி முகம் காட்டுவதுபோல், நாம் எதை பிரதிபலிக்கிறோமோ அதைத்தான் குழந்தைகள் பிரதிபலிப்பார்கள் எனவே அவர்களை ஒருபோதும் நொறுக்கிவிடாதீர்கள். குழந்தை கள் புத்தகங்கள் ஒருபோதும் கிழித்துவிடாதீர்கள், அவர்களை வாசிக்க பழகிக் கொள்ளுங்கள். குழந்தைகள் ஒரு ஓவியம், அவர் களை ஒருபோதும் கலைத்து விடாதீர்கள். அந்தக் குழந்தை களுக்காக நீங்கள் வாழுங்கள் என்றார்.

சென்னை சாகித்ய அகாடமி பொறுப்பு அலுவலர் அ.சு.இளங் கோவன் வரவேற்றார். சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பி னர் சொ.சேதுபதி தொடக்க வுரை நிகழ்த்தினார். தமிழ் ஆலோசனைக்குழு ஒருங் கிணைப்பாளர் கி.நாச்சிமுத்து மையக்கருத்துரை வழங்கினார்.

குன்றக்குடி அடிகளார் கல்வி உயராய்வு மையம் இயக்குநர் ச.மோகன் வாழ்த்துரை வழங்கி னார்.

குழந்தைகள் இதழ்களின் காலப்பின்புலமும் கற்பனை வளமும் எனும் தலைப்பில் செல் லகணபதி, சிறுவர் இதழ்களில் புலனாகும் மொழிநடையும் கற்பனை உத்திகளும் எனும் தலைப்பில் தேவிநாச்சியப்பன், சிறுவர் இதழாக்கங்களில் பாரம்பரியக் கதைகளின் தாக்கமும் புதுமை ஆக்கமும் எனும் தலைப்பில் மா.கமலவேலன், சிறுவர் இதழ்கள் வளர்க்கும் சித்திரக்கலை எனும் தலைப்பில் மு.முருகேஷ் ஆகியோர் பேசினர்.

முன்னதாக, குன்றக்குடி ஆதீனப் புலவர் பரமகுரு எழுதிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல் திரட்டு எனும் நூலை பொன்னம்பல அடிகளார் வெளியிட, ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் செயலர் சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.

தொடரும் இலக்கிய இதழ் ஆசிரியர் ஆ.கண்ணன் நன்றி கூறினார்.

மருத்துவர் பரமகுரு எழுதிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல் திரட்டு எனும் நூலை பொன்னம்பல அடிகளார் வெளியிட, பெற்றுக்கொள்கிறார் ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் செயலர் சந்திரசேகரன்.

SCROLL FOR NEXT