தமிழகம்

போலீஸ் அனுமதி மறுப்பு: பாமக மவுன விரதம் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டதால் பூரண மதுவிலக்கு கோரி பாமக மவுன விரதம் கடைபிடிக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக வெளியிட்ட குறிப்பில், ''தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி பாமக சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாளான அக்.2-ல் காலை 9 மணி முதல் 11 மணி வரை சென்னை மெரீனா காந்தி சிலை அருகில் மவுன விரதம் நடைபெற இருந்தது.

இதில் ராமதாஸ், குமரி அனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து விட்டதால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT