தமிழகம்

சென்னையில் 86 வார்டுகளுக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சித் தேர்தலில் 86 வார்டுகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார்.

இதன்படி 200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் இதுவரை 182 வார்டுகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு சென்னை தெற்கு மாவட்டத்தில் 128, 165, 175, 195, சென்னை மேற்கு மாவட்டத்தில் 91, 106, 135, சென்னை வடக்கு மாவட்டத்தில் 25, 39, 47, 52 என 11 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

35, 55, 61, 72, 77, 79, 96 ஆகிய 7 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பிறகு அறிவிக்கப்படுவார்கள் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT