தமிழகம்

சிகிச்சைக்காக ராஜாத்தி அம்மாள் நாளை ஜெர்மனி பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு செரிமானக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஜெர்மனியில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராஜாத்தி அம்மாள் நாளை இரவு ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன், மகள் கனிமொழி உள்ளிட்டோர் செல்கின்றனர்.

SCROLL FOR NEXT