செங்கல்பட்டு அருகே சிங்க பெருமாள்கோவிலில் அதிமுக, தேமுதிக, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 12,587 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அக்கட்சியின் பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை திமுக தான் ஆட்சி செய்கிறது. தமிழகத் தில் காங்கிரஸ், திமுக, அதிமுக என பல கட்சிகள் ஆட்சி செய் துள்ளன.
1971-ம் ஆண்டு அதிக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்தது திமுக மட்டுமே. அண்ணா அறிவாலயத்தில் தினந் தோறும் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வருகின்ற னர். கோவையில் விரைவில் சுமார் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளனர்.
திமுக மீதான நன்மதிப்பு
எப்போதும், மாற்றுக் கட்சியினர் ஆளுங்கட்சியில் இணைவதுதான் வழக்கம். ஆனால், எதிர்க்கட்சி யான திமுகவில் பலர் இணை வது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுகவின் மீதான நன்மதிப்பை இது காட்டுகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைப்பது திமுக மட்டுமே.
மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவது அடுத்த 5-ஆண்டிலா அல்லது 2-ஆண்டிலா என்பது தெரியவில்லை. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே மிகப் பெரிய போர் நடந்து வருகிறது. இப்பிரச்சினையில் ஒரு முறையாவது அனைத்துக் கட்சி கூட்டப்பட்டுள்ளதா?. அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக அரசு கூட்ட மறுக்கின்றது.
அனைத்து கட்சிக் கூட்டம்
ஆளும் கட்சி செய்யாததால் நாங்கள் அனைத்துக் கட்சி கூட் டத்தை கூட்டுகிறோம். வரும் 25-ம் தேதி கூட்டப்படுகிற கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. ஆட்சியை பிடிக் கும் நோக்கத்துடன் திமுக தொடங் கப்படவில்லை மக்கள் பிரச்சினை களை தீர்க்கவே தொடங்கப்பட்டது என்று அவர் பேசினார்.
கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர். ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, சுந்தர் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.