தமிழகம்

தேர்தல் ஆரவாரமில்லாத திருப்பரங்குன்றம் தொகுதி: சோர்வில் திமுக, அதிமுக தொண்டர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் தேர்தல் ஆரவாரமில்லாமல் உள்ளனர்.

கடந்த தேர்தலில் திருப்பரங்கு ன்றத்தில் போட்டியிட்டு வென்ற அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேல் காலமானதால் இந்த தொகுதி காலியாக இருந்தது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி களுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் நவ. 19-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும்கட்சியை எதிர்த்து தேர்தலில் வெற்றி வாய்ப்பு சிரமம் என்பதால் திமுக நிர்வாகி களிடையே தேர்தல் ஆரவாரம் இல்லை. சமீப காலமாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் எஸ்.திரு நாவுக்கரசர் திமுக நிலைப்பாட்டுடன் முரண்பட்டு நிற்பதால் இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸுடன் கூட்டணி நீடிக்கிறதா, இல்லையா என்பது தெரியாமல் இருகட்சித் தொண்டர்களும் குழப்பத்தில் உள் ளனர்.

அதிமுக, திமுக நேரடி போட்டி

அதிமுக நேற்று இந்த தொகுதிக்கான வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.போஸை அறிவித்துள்ளதால் அக்கட்சியில் சீட்டை எதிர்பார்த்த முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரின் கவனமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் மீதே இருப்பதால் அவர்களிடம் முன்பிருந்த தேர்தல் ஆரவாரம், உற்சாகம் தற்போது இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக கூறப்படுவதால் அக்கட்சி நிர்வாகிகள் சோர்வடைந் துள்ளனர். பாஜக போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும் அக்கட்சி மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. தமாகா போட்டியிடவில்லை எனத் தெரிவித்துவிட்டது. மக்கள் நலக்கூட்டணி போட்டியிட வாய்ப் பில்லை எனக் கூறப் படுகி றது. அதனால், தேர்தல் களமானது திமுக, அதிமுகவுக்கான நேரடி போட்டியாகவே அமைந்துள்ளது.

கடந்த காலத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட மறுநாள் முதலே, திமுக, அதிமுக கட்சியினர் சுவர் விளம்பரம் செய்வது முதல் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், பூத் வாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது என சம்பந்தப்பட்ட தொகுதியே திருவிழா கோலம் பூண்டிருக்கும். ஆனால், தேர்தல் தேதி அறிவித்து 3 நாள்களாகியும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆரவாரமில்லாமல் இருக்கின்றன.

குடிநீர் பிரச்சினையால் அதிருப்தி

பொதுமக்களை பொறுத்தவ ரையில், கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் குடிநீர் பிரச்சினையால் அதிருப்தியில் இருக்கின்றனர். தேர்தல் அறிவிப்பை தங்களுக்கான எம்எல்ஏவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக கருதாததால் இத்தொகுதி மக்கள் தேர்தல் ஆரவாரமில்லாமல் இருக் கின்றனர்.

SCROLL FOR NEXT