தமிழகம்

நாளை என்எல்சி முற்றுகை: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அனைத்து விவசாயிகள் சங்க கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்க மறுத்து, தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது.

காவிரி நீர் கர்நாடகாவுக்கு சொந்தம் என்றால், நெய்வேலி மின்சாரம் தமிழகத் துக்கே சொந்தம் என வலியுறுத்தி, அக்.18-ல் காலை 10 மணிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்க (என்எல்சி) நிர்வாக அலுவலகம் முன் ஆயிரக்கணக் கான விவசாயிகள், நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் பங்குகொள்ளும் முற்றுகைப் போராட்டம் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத் துடன் இணைந்து நடத்தப்படும்.

இந்த போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். போராட்டத்தில் கலந்துகொள்ள மற்ற அமைப்புகளின் தலைவர்களி டம் பேசி வருகிறோம் என்றார்.

          
SCROLL FOR NEXT