விருத்தாசலம் தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு வகைகள், தின்பண்டங்கள் பிரதானம். முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்குப் பலகாரங்கள் செய்ய சில நாட்களுக்கு முன்னரே தயாராகிவிடுவார்கள். அரிசி, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்டவற்றைக் கழுவி, காய வைத்து அவற்றை அரைத்து தயார் நிலையில் வைப்பது, அதிரசத்துக்கு உரலில் மாவு இடித்து அதைப் பதப்படுத்துவது என பரபரப்பாக இருக்கும்.
தின்பண்டங்களின் தரம்
தீபாவளி பண்டிகைக்காக வீட் டில் இனிப்பு, கார வகைகள் செய் வது காலப்போக்கில் மறைந்து கொண்டே வருகிறது. ஸ்வீட் ஸ்டால் கள், பண்டிகைக்கால பலகாரக் கடைகளில் தின்பண்டங்கள் வாங்குவது அதிகரித்துவிட்டது. தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பாக இனிப்பகங்களிலும், பலகாரக் கடைகளிலும் பொதுமக் கள் கூட்டம் அலைமோதுகிறது. கடைகளில் விற்கப்படும் தின்பண் டங்களின் தரத்தைப் பற்றி கவலைப் படாமல் வாங்கிக்கொண்டு செல் வதைக் காண முடிகிறது.
கடைசி நேர விற்பனை மோகத் தால் பண்டிகைக் கால பலகாரங் களின் தரம் கடந்த சில வருடங் களாக கீழ்நோக்கிச் சென்று கொண்டே இருப்பதை உணர முடி கிறது. பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இனிப்பகங் களின் தின்பண்டங்கள் கூட வயிற்றைப் பதம் பார்த்து உடல் நிலையைப் பாதிக்கச் செய்துவிடு கிறது.
பண்டிகை நேரத்தில் இனிப்புப் பண்டங்களுக்கு கூடுதல் முக்கியத் துவம் அளிக்கப்படும் வடமாநிலங் களில், கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக பல ஸ்வீட் ஸ்டால்களில் சுகாதார அலுவலர்கள் பரி சோதனை செய்தனர்.
அப்போது, உடல்நிலையைப் பாதிக்கக்கூடிய உணவு கலப்படப் பொருட்கள் இருப்ப தைக் கண்டறிந்தனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கை தமிழகத்தில் உணவு பாது காப்புத் துறையால் சரிவர மேற்கொள்ளப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தீபாவளி பண்டச் சீட்டு
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீன் கூறும்போது,
“தீபாவளி பண்டிகையின்போது புற்றீசல் போல் பலகாரக் கடைகள் முளைக்கின்றன. தீபாவளி பண்டச் சீட்டு நடத்தி, திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, அங்கு பலகாரம் செய்து வழங்குவது கடந்த சில வருடங்களில் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இவைகள் எல்லாம் சரியான தரத்தோடு செய்யப்படுகிறதா என்று நுகர் வோர் பரிசோதித்து வாங்க வேண் டும்.
எந்த பலகாரக் கடையிலும் பலகாரம் எப்போது தயார் செய் யப்பட்டது என்ற விவரத்தைச் சரி யாக தெரிவிப்பதில்லை. ஒவ் வொரு பலகாரக் கடைகளிலும் தொற்றுநோய் உள்ள ஊழியர் எவரும் இல்லை என்ற சான்றிதழ் நுகர்வோரின் பார்வைக்கு தெரியும் படி வைத்திருக்க வேண்டும். அதுபோன்று அவர்கள் பயன் படுத்துகிற எண்ணெய் வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். இவையெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லை என்று சொல்வார்கள்.
உணவு ஆய்வாளர்கள் ஆய்வு
சுகாதாரமான உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றனவா என்பதை கண்டறிய, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் இயங்கும் வட்டார உணவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இப் போதே அதற்கான பணிகளைத் தொடங்கினால்தான் நுகர்வோ ருக்குச் சுகாதாரமான உணவுப் பொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
இதை கடந்த சில வருடங்களில் வட்டார உணவு ஆய்வாளர்கள் சரிவர செய்வதில்லை என்றே புகார்கள் வருகின்றன” என்றார்.
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, தீபாவளி பண் டிகைக்கு தரமான உணவுப் பொருட் கள் விற்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து, தரமற்ற உணவுப் பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக் கையாக உள்ளது.
விலை ஏற்றம்
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பலகாரங்களின் விலை அதிகரித்துள்ளது. இனிப்புகள் தயாரிப்பதற்குத் தேவையான முந்திரி, மாவு, நெய், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்கின்றனர் இனிப்பக உரிமையாளர்கள்.