தமிழகம்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா? - மேலும் 3 பேரிடம் விசாரணை

செய்திப்பிரிவு

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோவையில் மேலும் 3 இளைஞர்களிடம் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2-ம் தேதி ஐஎஸ் பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை என்ஐஏ அதிகாரி கள் கைது செய்தனர். அவர்களில், கோவை தெற்கு உக்கடம் பகுதி யைச் சேர்ந்த அபு பஷீர் (எ) ரஷீத் தும்(26) ஒருவர். இவரிடம் விசா ரணை நடத்தியதில், மேலும் சிலருக்கு ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கோவை ஜி.எம். நகரைச் சேர்ந்த 5 இளைஞர்களிடம், மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், மேலும் 3 பேரை நேற்று முன் தினம் மாலை பிடித்த என்ஐஏ அதிகாரிகள், அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “கேரள மாநிலத்தில் கைதான ஐஎஸ் தீவிரவாதி, கோவையில் படித்தவர். அவர், கோவையைச் சேர்ந்த சிலருடன் முகநூல் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அவருடன் முகநூல் தொடர்பில் இருந்த சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களது செல்போன், மடிக்கணினி ஆகியவற்றையும் சோதனை செய்தோம். இவர்களில் யாராவது ஐஎஸ் இயக்கத்தில் சேரத் திட்டமிட்டிருந்தார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT