தமிழகம்

வெளிநாட்டு தமிழர்களிடம் தமிழை வளர்க்க தனித்துறையை உருவாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

உலகத் தமிழர் பேரவை சார்பில் ‘தமிழ் உலக சந்திப்பு’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் பேசியதாவது:

கடந்த 1978-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் தமிழில் பேசினேன். அப்போது அங்கிருந்த இந்தி உறுப்பினர்கள் ‘முட்டாளே இருக் கையில் உட்கார் , தமிழில் பேசாதே’ என்றனர். ‘‘நான் முட்டாள் அல்ல. தமிழில்தான் பேசுவேன்’’ என்றேன்.நாடாளுமன்றத்தில் தமிழில் பேச லாம் என்ற உரிமையை நான் நிலைநாட்டினேன்.

ஆனால் அதன்பிறகு தமிழகத் தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்கள் தமிழில் பேசுவதைத் தவிர்த்தே வந்துள்ளனர். பாடுபட்டு வாங்கிய உரிமையைக்கூட தமிழ கத்து அரசியல்வாதிகள் பாதுகாக்க முன்வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கனடாவில் இருந்து வந்திருந்த ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட தங்கவேலு வேலுப்பிள்ளை பேசும் போது, ‘‘தமிழர்கள் அனைவரும் வீட்டில் கட்டாயம் நல்ல தமிழில் பேச வேண்டும். அப்போதுதான் தமிழ் அடுத்த தலைமுறைக்கும் வாழும். வெளிநாட்டில் உள்ள தமிழர்களிடம் தமிழை வளர்க்க தனித்துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்’’ எனறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த அ.வை.கிருஷ்ணசாமி பேசும் போது, ‘‘தற்போது தமிழை ஆட்சி மொழியாக கொண்டிருக்கும் எங்களது நாட்டைப்போல், பழங் கால தமிழர்கள் கவனமாக இருந்தி ருந்தால், உலகின் பாதிக்கும் மேற் பட்ட நாடுகளில் தமிழ்தான் ஆட்சி மொழியாக இருந்திருக்கும்’’ என்றார்.

எழுகதிர் ஆசிரியர் அருகோ பேசும்போது, ‘‘திராவிட ஆட்சி யில்தான் தமிழ் வழிக் கல்விக்கு மூடுவிழா காணப்பட்டது. அத னாலேயே தமிழ் மொழியின் வளர்ச்சி தடைபட்டது. ஈழத்தில் தமிழர்கள் உரிமையுடன் வாழ தமிழகத்தில் தமிழர் ஆட்சி மலர வேண்டும்’’ என்றார்.

திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தமிமுன் அன்சாரி எம்எல்ஏ உட்பட பலர் பேசினர்.

முன்னதாக உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர் மறைந்த ஜனார்த்தனனின் படம் திறந்து வைக்கப்பட்டது. உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் அக்னி, இந்நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்.

SCROLL FOR NEXT