57 ஆயிரம் முதுகலை பட்டதாரி கள் எழுதியுள்ள ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு முடிவு இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படும் என்று கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கீ ஆன்சர் வெளியாகி 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் ‘ஸ்லெட்’ தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ‘ஸ்லெட்’ தேர்வு முடிவுகள் 24-ம் தேதி (திங்கள்கிழமை) வெளி யிடப்படும் என்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது. இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம் சார்பில் ‘ஸ்லெட்’ தேர்வுக்குழு உறுப்பினர் -செயலர் நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு முடிவுகள் 24-ம் தேதி (திங்கள் கிழமை) காலை 10 மணிக்கு www.setresult2016.in மற்றும் www.motherteresawomenuniv.ac.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும்.
‘ஸ்லெட்’ தேர்வு நடந்து 8 மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ ‘நெட்’ தகுதித் தேர்வு ஆண் டுக்கு 2 தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகின்றன. இதேபோன்று ‘ஸ்லெட்’ தேர்வும் திட்டமிட்டபடி ஆண்டுக்கு 2 தடவை நடத்தப் படுவதுடன் தேர்வு முடிவுகளை யும் காலதாமதம் செய்யாமல் வெளியிட வேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.