திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 24) மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் திருப்பூர் வருகிறார்.
பாதுகாப்பு நலன் கருதி மாநகருக்குள் பட்டாசுகள் வெடிக்கவும், பலூன்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) பறக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்துள்ளார்.