தமிழகம்

மாதம் ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் கோரி நடிகை ரம்பா நீதிமன்றத்தில் மனு

செய்திப்பிரிவு

தனக்கும் தனது இரு பெண் குழந்தைகளுக்கும் மாதந்தோறும் ரூ.2.50 லட்சத்தை இடைக்கால ஜீவனாம்சமாக கணவர் தரவேண்டும் என்று கோரி நடிகை ரம்பா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகை ரம்பா, தனது கணவர் இந்திரகுமார் பத்மநாதனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அந்த மனுவுடன் சேர்த்து தனக்கு இடைக்காலமாக மாதந்தோறும் ரூ. 2.50 லட்சத்தை ஜீவனாம்சமாகத் தர கணவருக்கு உத்தரவிடக் கோரி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘ நான் இப்போது படங்களில் நடிக்கவில்லை. நடிப்பதை நிறுத்தி விட்டேன். எனவே எனக்கும், எனது இரு மகள்களுக்கும் படிப்பு மற்றும் மருத்துவச் செலவுக்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ. 2.50 லட்சத்தை வழங்க எனது கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார். இந்த மனு டிசம்பர் 3-ம் தேதியன்று சென்னை மாவட்ட 2-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT