தமிழகம்

200 அதிமுகவினர் பாஜகவில் இணைந்தனர்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் சென்னை மாநகராட்சி யின் 118-வது வார்டில் உள்ளது. இந்த வார்டில் அதிமுக சார் பில் கே.சி.விஜய் என்பவர் வேட் பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 118-வது வார்டின் அதிமுக இளைஞர ணிச் செயலாளர் தனசேகரன் தலைமையில் 200 அதி முகவினர் பாஜக மாநிலத் தலை வர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தனர்.

இது தொடர்பாக தனசேகரன் கூறும்போது, ‘‘அதிமுகவில் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். என்னுடன் இணைந்து 200-க்கும் அதிகமானவர்கள் கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளனர்.

ஆனால், எங்களின் உழைப்பு மேலிடத்துக்கு செல்லவிடாமல் சிலர் தடுக்கின்றனர். மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் உழைத்தவர்களை கண்டு கொள் ளவில்லை. எனவே, மோடியால் ஈர்க்கப்பட்டு நாங்கள் 200 பேர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந் துள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT