முதல்வர் ஜெயலலிதாவின் தொகு தியான ஆர்.கே.நகரில் மாசுக்கட் டுப்பாட்டு வாரியம் சார்பில் ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ அமைக்கப் படவுள்ளது. இதற்காக தகுதி யான நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆர்.கே.நகர் தொகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.2 கோடி செலவில் ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ அமைக்கப் படும் என்று முதல்வர் ஜெயல லிதா ஏற்கெனவே, சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். இத்திட்டத்தை செயல்படுத்துவ தற்காக ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குபேட்டையில் தண்டையார்பேட்டை காக்ரேன் பேசின் சாலையில் 50 ஆயிரத்து 110 சதுரடி நிலம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
இந்த பூங்காவில் பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாக பசுமை தோட்டம், சைக்கிளில் பயணிப்பதற்கான பாதை, குழந்தைகள் விளையாடுவதற் கான பூங்கா, சுற்றுச்சூழல் விழிப் புணர்வை ஏற்படுத்தும் படங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெற்ற டிஜிட்டல் பேனர்கள் ஆகியவை இடம்பெறும். பசுமை தோட்டத்தில் சுகாதாரம், தாவரம், மின்சாரம், பசுமை நிறைந்த வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் விழிப் புணர்வு ஆகிய கருப்பொருளில் தனித்தனி பகுதிகள் இடம்பெறும்.
இந்த திட்டத்தை செயல்படுத்து வதற்கு விருப்பம் உள்ள நிறு வனங்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இந்த திட்டத்தை, எவ்வாறு செயல் படுத்தலாம் என்பது குறித்த யோசனைகளை கருத்துருவாக தயாரித்து நவம்பர் 4-ம் தேதிக் குள் வழங்க வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறி வுறுத்தியுள்ளது. இந்த கருத் துருவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வல்லுநர் குழு ஆய்வு செய்து அங்கீகரிக்கும். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே, சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி வழங்குவதற்கு தகுதி பெற்ற நிறுவனமாக கருதப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறி வுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கிண்டி யில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அலுவலகத்தை அணுகலாம் என்றும் மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.