தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் சீரமைக்கப்படும் சாலைகள்

செய்திப்பிரிவு

முதல்வரின் கோவை வருகையை முன்னிட்டு, மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.23) மாலை கோவை வருகிறார். 24-ம் தேதி ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொள்ளாச்சியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையொட்டி, மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவிநாசி சாலை விமான நிலையத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் வழி, ஈச்சனாரி மற்றும் பொள்ளாச்சி செல்லும் சாலைகளில் காணப்படும் சிறு குழிகளை ‘பேட்ஜ் வொர்க்’ மூலம் சரி செய்யும் பணி நடக்கிறது. சாலையின் மையத் தடுப்புகளில் வண்ணம் அடித்தல், சேதமடைந்திருக்கும் நடைபாதைகளை சீரமைத்தல், சாலைகளில் தேங்கியிருக்கும் மண் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT