திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
பொறுமைக் கும் எல்லை உண்டு. குட்டக் குட்ட குனிந்துகொண்டேபோவது தன் மானத்துக்கு இழுக்கு. இதுவரை எத்தனையோ முறை பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் இந்திய எல் லைக்குள் நுழைந்து திடீர் திடீரென்று தாக்குதல் நடத்து வதை வழக்கமாகக் கொண்டிருந்த னர். இந்தியா எதையும் தாங் கிக்கொள்ளும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் ராணுவம் செயல் பட்டது.
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள நமது ராணுவத் தலைமையகத்தின் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அண்மையில் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே பதான்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தினார்கள். உரி தாக்குதல் பற்றி கருத்துத் தெரிவித்த பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ‘இது இந்தியாவால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம்’ என கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா பகுதிகளையொட்டி உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த இருப்பதாக நமது ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 28-ம் தேதி நள்ளிரவில் நமது ராணுவத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம் கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 பயங்கரவாத முகாம் கள் பூண்டோடு அழிக்கப் பட்டுள்ளன. ஏராளமான பயங்க ரவாதிகளும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பாகிஸ் தான் ராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இந்திய ராணு வம் தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச் சரவை கூடி விரிவாக விவாதித் துள்ளது. இந்திய ராணுவம் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு போகாது. தேவைப் பட்டால் இப்படிப்பட்ட தாக்குதல் களையும் நடத்தும் வல்லமை பெற்றது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தையும் அதற்குக் காரணமான பிரதமர் மோடியையும் திமுக சார்பில் பாராட்டுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.