தமிழகம்

3% அகலவிலைப்படி உயர்வை ஜன.1 முதல் அமலாக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்

செய்திப்பிரிவு

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் தீனதயாள் தலைமையில் பூந்தமல்லியில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, பொருளாளர் ருக்மாங்கதன், தலைமைச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அகவிலைப்படியை ஜூலை 1 முதல்வழங்காமல் ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி 34 சதவீதமாக நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

2019 ஏப்.1 முதல் கடந்த ஆட்சியாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களின் சரண்டர் (ஈட்டிய விடுப்பு) தற்போது மறுஉத்தரவு வரும் வரைநிறுத்திவைக்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணியை பிற துறை அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT