தமிழகம்

முதல்வரும், அமைச்சர்களும் அரசு ஊழியர்களா? - சட்ட நிபுணர்கள் விளக்கம்

செய்திப்பிரிவு

முதல்வர் மற்றும் அமைச்சர்களை அரசு ஊழியர்கள் என்று அழைப்பது சரியா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களை அரசு ஊழியர்கள் என்று அழைக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆர்.ராஜவேல் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்களை அரசு ஊழியர்கள் என்று சொல்வது சரியா என்ற விவாதம் எழுந்துள்ளது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கறிஞர் ராஜவேல் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு கள் 14 மற்றும் 141 பிரகாரம் அரசு ஊழி யர்களையும், அரசியல் காரணமாக ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் அமைச் சர்களாக பதவி வகிப்பவர்களையும் சமமாக பாவிக்கக் கூடாது. இதுதான் என்னுடைய வாதம். மக்கள் பிரதிநிதித் துவ சட்டத்தில் இதற்கு இடமில்லை.

கடந்த 1979-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு மாநிலத்தின் முதல் வரும் அரசு ஊழியரே என சட்டப் பொருள் விளக்கம்தான் தந்துள்ளதே தவிர, அதுவே சட்டமாகி விடாது. மாநிலத்துக்காக ஆஜராகி வாதிடும் வழக்கறிஞர்களுக்கு அரசாங்கப்பணத் தில் இருந்துதான் சம்பளம் கொடுக் கிறோம். அதற்காக அவர்களும் அர சாங்க ஊழியர்களாகி விடுவார்களா?. அரசாங்க ஊழியர்களுக்கும், அரசியல் மூலம் பதவிக்கு வருபவர்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. ஒரு மாநிலத்தின் முதல்வரை அரசு ஊழியர் எனக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது.

முதல்வரும் அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்வு செய்யப்படுபவர்கள். அவர்களை யுபிஎஸ்சி அல்லது டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் அரசாங்க ஊழியர்களின் பட்டியலில் வைக்க முடியாது. முதல்வர் என்பவர் அரசாங்கப் பணியை மட்டும் செய்யவில்லை. கூடவே தன்னுடைய கட்சிப்பணியையும் கவனி்க்கிறார். அதேபோல் ஊழல் தடுப்புச்சட்டத்தில் கொடுக்கப்பட்ட விளக்கத்தின்படியும், ஒரு மாநிலத்தின் முதல்வரை முழுமை யான அரசு ஊழியராக எடுத்துக்கொள்ள முடியாது.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத் துக்குவிப்பு வழக்கில் எந்த இடத்திலும் அவர் தவறு செய்து இவ்வளவு சொத்து களை சேர்த்துள்ளார் என யாருமே குறிப்பிடவில்லை. அதேபோல ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 31(இ) பிரகாரம் அளவுக்கு அதிகமாக சொத்து குவித் ததை கடுங்குற்றமாக கருத முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அரசு ஊழியர்கள் யார் என்பதற்கு தெளி வான சட்டம் உள்ளது. ஆனால் முதல் வர் மற்றும் அமைச்சர்கள் அரசு ஊழி யர்கள் என்பதற்கு சட்டம் கிடையாது. சட்டப் பொருள் விளக்கம்தான் உள்ளது. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். அதேபோல, முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கினை மனதில் வைத்து நான் இந்த பொது நல மனுவையும் தாக்கல் செய்யவில்லை. சட்டத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மனுவை தாக்கல் செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மனு தொடர்பாக சட்ட நிபுணர் கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:

வி.எஸ்.சேதுராமன் (அதிமுக வழக் கறிஞர் பிரிவு தலைவர்)

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டிப் பாக விடுதலையாவார். அதைத்தான் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் அப்படியொரு தீர்ப்பு கிடைத்தால் தமிழகமே மகிழ்ச்சியடையும். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவருமே அரசு ஊழியர்கள் என்ற வரையறைக் குள்தான் வருகின்றனர் என ஏற் கெனவே உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது. எனவே, முதல்வரின் வழக்கையும் இந்த பொது நல மனுவையும் எந்தவகையிலும் தொடர்புபடுத்த முடியாது.

பி.வில்சன் (மூத்த வழக்கறிஞர், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர்)

முதலமைச்சரையும், அமைச்சர் களையும் அரசு ஊழியர்கள் என கருதக்கூடாது என்று பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் 2-க்கும் மேற் பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு களுக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியபடி, ‘அரசாங்கத்திலிருந்து ஊதியம் பெற்று அரசுப்பணிகளை செய்பவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள்தான்’ என்று உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே, திரும்பவும் இதுமாதிரியான மனுக்களை தாக்கல் செய்வதன் காரணம் புரியவில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்று சொன்னால் அது மிகப்பெரிய ஆபத்துக்களில் முடிந்துவிடும்.

கே.எம்.விஜயன் (மூத்த வழக்கறிஞர்)

58 வயது வரை அரசுப்பணியில் இருப்பவர்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் கிடையாது. முதலமைச் சர், அமைச்சர்கள் ஆகியோரும் பொது ஊழியர்கள்தான். இவை யனைத்தும் 1988-ம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவை. ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பதவிகளை தவிர மற்ற அனைவரும் அரசு ஊழி யர்கள்தான். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறு செய்யும் ஒரு அரசு அதிகாரிக்கு உதவினால் கூட அவர்களை குற்றவாளிகளாக சேர்க்க வழிவகை உள்ளது. இதுபோன்று வழக்கு தொடர்பவர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், அவை சட்டப்படி எடுபடாது. இது தொடர்பாக முந்தைய தீர்ப்புகளில் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக விவாதிக்க ஏதுமில்லை.

SCROLL FOR NEXT