அரியலூர் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் சோழன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் விஸ்வ நாதன் (70). ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக புகார் தெரிவிப்பதுடன், சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த மாதம் 13-ம் தேதி வீட்டி லிருந்து வெளியே சென்ற இவர், பிறகு வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பான புகாரின் பேரில் குவாகம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மாயமான விஸ்வ நாதன் கடத்தப்பட்டாரா, கொலை செய்யப்பட்டாரா என பல கோணங்களில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், ரோந்துப் பணியின்போது, சந்தேகப்படும்படியாக நின்ற நைனார்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவர், சிறுகளத்தூர் பாஸ்கர், திருநெல் வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து விஸ்வநாதனைக் கொன்று, உடலை வெள்ளாற்றில் புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து பாலமுருகன், பாஸ்கர், அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலை மறைவாக இருந்த நைனார் குடிக்காட்டைச் சேர்ந்த குண சேகரன் (52) என்பவரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.