காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் உடல்நலம் பெற்று பணிக்கு திரும்பும் வரை அவர் கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. மேலும், அமைச் சரவை கூட்டங்களுக்கும் ஓ.பன்னீர் செல்வமே தலைமையேற்பார் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த 19-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், உணவு பாதுகாப்புச் சட்டம், உள்ளாட்சி களுக்கு தனி அதிகாரிகள் நிய மனம் தொடர்பான முக்கிய முடிவு கள் எடுக்கப்பட்டன. சில திட்டங் களுக்கு ஒப்புதலும் வழங்கப் பட்டன.
இதற்கிடையே, மத்திய எரி சக்தித் துறையின் ‘உதய்’ திட்டத்தில் தமிழக மின் துறை இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை, தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி டெல்லியில் சந்தித்து, தமிழக தரப்பு கோரிக்கைகளை விளக்கியுள்ளார்.
மேலும் காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், அரசு ஊழியர்களுக்கான ஓய் வூதியத் திட்டம் தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டி யுள்ளது. இதற்காக தமிழக அமைச் சரவை இன்று மீண்டும் கூடுகிறது. மாலை 5 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை யில் நடக்கும் இக்கூட்டத்தில், ‘உதய்’ திட்டத்தில் இணைவது, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரி வித்தன.