தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 20-ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து வருகிறது. மீதம் உள்ள பகுதிகளில் கூட 2 அல்லது 3 நாட்களில் வலு விழப்ப தற்கான சாதகமான சூழல் தென்படுகிறது. அதனால் தமிழகம் புதுச்சேரியில் 20-ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப் புள்ளது.
சென்னையில் வானம் பொது வாக மேகமூட்டத்துடன் காணப் படும். அதிகபட்ச வெப்பநிலை யாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.