சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீரின் அளவு விநாடிக்கு 1,300 கனஅடியாக அதிகரிக் கப்பட்டுள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர் இருப்பும் அதிகரித் துள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு கட் டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர அரசு திறந்து விடுவது வழக்கம். கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நீர் திறக்கப்படவில்லை.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ததால், சென் னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. இதனால் சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆந்திர அணை களில் போதிய நீர் இருப்பு இல்லாததால் நடப்பு ஆண்டுக்கு முதல் கட்டமாக ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட வேண்டிய கிருஷ்ணா நீர் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஆந்திராவில் பெய்த கனமழையால் சைலம் மற்றும் சோமசீலா அணை, கண்ட லேறு அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது. ஆகவே, தமிழக பொதுப்பணித்துறை அதி காரிகளின் கோரிக்கையின்படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக கடந்த 10-ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.
தொடக்கத்தில் விநாடிக்கு 200 கன அடியாக திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப் பட்டு, கடந்த 23-ம் தேதி விநாடிக்கு ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டது. கால்வாய்கள் வறண்டு இருந்ததால் மிக மெது வாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர் கடந்த 18-ம் தேதி மாலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயிண்டுக்கு வந்த டைந்தது. பின்னர் அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு கடந்த 20-ம் தேதி காலை வந்தடைந்தது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட நீரின் அளவை மேலும் உயர்த்திய ஆந்திர அரசு நேற்று முன்தின நிலவரப்படி விநாடிக்கு 1,300 கன அடி நீரை திறந்துவிட்டுள்ளது. ஆனால், வழி நெடுகிலும் ஆந்திர விவசாயிகள் நீரை உறிஞ்சி விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை நிலவரப்படி, ஜீரோ பாயிண்ட்டுக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 280 கனஅடி அளவிலே வந்து கொண்டிருக்கிறது.
அதேநேரம், பூண்டி ஏரிக்கு நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 304 கனஅடி அளவில் கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 223 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. இதில், சென்னையின் குடிநீர் தேவைக் காக விநாடிக்கு 179 கன அடி நீர் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 223 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.