அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்பதை விளக்கி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலி னுக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் திருமாவளவன் கூறியிருப்ப தாவது:
காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும். அப்படி அரசு நடத்தாத பட்சத் தில் எதிர்க்கட்சியான திமுக நடத்த வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக நடத்துவதை விசிக வரவேற்கிறது. அதில், பங்கேற்க வேண்டி எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி.
காவிரி பிரச்சினை தமிழகத் தின் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இதை எதிர்த்து தமிழகத்தில் அனைவரும் ஒன் றிணைந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு. இதை மக்கள் நலக் கூட்டணி கட்சிகளிடம் வலியுறுத்தினோம். ஏற்கெனவே, திமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றதையும் எடுத்துக் கூறினோம்.
அரசியலோடு முடிச்சுபோடாமல்
காவிரி பிரச்சினையை தேர் தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுக வேண்டும் என்பதே விசிகவின் உறுதி யான நிலைப்பாடு. அந்த அடிப்படையில்தான் ம.ந.கூட்டணி யின் தோழமை கட்சிகளையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் .
இது தொடர்பாக விசிக உயர் நிலைக் குழு கூட்டம் கடந்த 24-ம் தேதி நடத்தப்பட்டது. அதில் ம.ந.கூட்டணியின் முடிவை பொறுத்து திமுகவின் அனைத் துக்கட்சி கூட்டத்தில் பங்கேற் பது என்று முடிவெடுக்கப் பட்டது. எனவே, மீண்டும் ம.ந.கூட் டணியில் உள்ள தோழமைக் கட்சிகளோடு ஆலோசனை நடத்தி னோம்.
3 தொகுதிகளுக்கான தேர் தலில் ம.ந.கூட்டணி பங்கேற்க வில்லை. இந்நிலையில், திமுக கூட்டும் கூட்டத்தில் பங்கேற்றால் தொண்டர்கள் மத்தியில் தேவை யில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ம.ந.கூட்டணியில் உள்ள பிற கட்சியினர் தயக்கத்தை வெளிப் படுத்தினர். எனவே, ம.ந.கூட்டணி யின் பெரும்பான்மை முடிவை கருத்தில்கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் விசிக உள்ளது என்பதை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஸ்டாலின் பதில்
திருமாவளவனுக்கு ஸ்டாலின் அனுப்பிய பதில் கடிதத்தில், ‘தங்கள் உள்ளத்தின் நிலை மற்றும் உண்மை நிலையை புரிந்துகொண் டேன். அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதை வரவேற்றதற்கு நன்றி. ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்றுத் தேவையை முழுவதும் உணர்ந்து, இதைத் தேர்தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுகிட வேண்டும் என்ற உங்களின் கருத்து அனைவராலும் ஏற்கப்பட வேண்டியது. இதில் எங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியே. நன்றி’ என தெரிவித்துள்ளார்.