தமிழகம்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 14 மயான பூமிகளில் எல்.பி.ஜி தகன மேடை

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள 14 மயான பூமிகள் திரவ பெட்ரோலியம் என்ற எல்.பி.ஜி. தகன மேடையாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநகரை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகள், சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் செய்யப்படுகிறது.

அதன்படி, சி.பி.சி.எல்., நகர், புழல், முல்லை நகர், ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட 14 மயான பூமிகளை மாநகராட்சி மின் தகன மேடையிலிருந்து, எல்.பி.ஜி., தகன மேடையாக மாற்றம் செய்ய உள்ளது. இதற்காக, 5.67 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பம் கோரப்பட்டுள்ளது.

ஒப்பம் முடிவடைந்தப்பின், உடனடியாக பணிகள் துவங்கப்பட்டு, இந்த ஆண்டுகள் செயல்பாட்டுக்கு வரும் என மாநரகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT