எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் லட்சுமி நகர் கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ். வீட்டின் அருகில் உள்ள மசூதியில் இமாமாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சவுதா பேகம். இவர் களின் மகள் பாகிமா (8). மகன் முகமது (4). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பாகிமா 3-ம் வகுப்பும், முகமது பிரிகேஜி-யும் படித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு பாகிமா வும், முகமதுவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இருவரையும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறை யாததால், மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் இருவரையும் அனு மதித்தனர்.
குழந்தைகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முகமதுவும், அன்று இரவே பாகிமாவும் அடுத்தடுத்து உயிரிழந் தனர். இதனால், குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல மதுரவாயல் கார் மேகம் நகரைச் சேர்ந்த ஆரோக் கியசாமி மகள் லட்சிதா (11). காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு, சில நாட் களாக இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சிறுமி உயிரிழந்தார். காசநோய் உள்ளிட்ட பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த திருத்தணியைச் சேர்ந்த கீர்த்தனா (11) என்ற சிறுமி யும் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 4 குழந் தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் டெங்கு காய்ச்ச லால் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இதை மருத்துவர்கள் மறுத்துள்ள னர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:
குழந்தைகள் டெங்கு காய்ச் சலால் இறக்கவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துவிட்டு காய்ச்சல் குறையாததால், குழந்தைகளை இங்கு சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை.
உயிரிழந்த பாகிமா, முகமது ஆகியோரின் பரிசோதனை முடிவு கள் இன்னும் வரவில்லை. பொழிச் சலூர் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் 20 குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. அவர்கள் வீடுவீடாக சென்று காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொசுக்கள் ஒழிப்புப் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மதுர வாயல் பகுதியிலும் மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.