தமிழகம்

3 தொகுதி தேர்தல் குறித்து ம.ந.கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு: ஜி.ராமகிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் திருநெல்வேலியில் நேற்று கூறியதாவது:

திருநெல்வேலியில் நவம்பர் 12,13,14-ம் தேதிகளில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சிறப்பு மாநாட்டில் கட்சி யின் பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, பிரகாஷ்காரத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற் கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொல்கத்தாவில் அகில இந்திய அளவிலான ஸ்தா பன சிறப்பு மாநாடு நடைபெற் றது. இந்த மாநாட்டு முடிவுகளை தமிழகத்துக்கு ஏற்ப செயல் படுத்துவது குறித்து திருநெல்வேலி மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. மேலும், ‘மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா’ என்பதை நேஷனல் மெடிக்கல் கமிஷனாக மாற்றும் மத்திய அரசின் திட்டத்தையும் எதிர்க்கிறோம். கூடங்குளத்தில் அணு உலை விரிவாக்கப் பணிகளை எதிர்க்கிறோம்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. காவிரி பிரச்சினையில் மத்திய அரசு அரசியல் ஆதாயத்துக்காக கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

தமிழகத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தேர்தல் நிலைப்பாடு குறித்து மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT