காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் நேற்று தொடங்கினர்.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் பி.ஆர்.பாண்டியன், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள் கே.ராஜேந்திரன், ஜி.கிரிதரன், எஸ்.ராமதாஸ் உட்பட 15-க்கும் அதிகமானவர்கள் ஈடுபட் டுள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்ததன் மூலம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு துரோகம் செய்துள் ளார். இதனால் தமிழக விவசாயி கள் பரிதவிப்பில் உள்ளனர். உச்ச நீதிமன்றத்துக்கே மத்திய அரசு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியை யார் பாதுகாப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவமதிப்பு
காவிரி பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்கச் சென்ற அதிமுக எம்பிக்களை பிரதமர் சந்திக்கவில்லை.
மக்களவை துணைத்தலை வரைக் கூட பிரதமர் சந்திக்க மறுத்ததன் மூலம் பிரதமர் மக்களவையை அவமதித் துள்ளார். கர்நாடகாவில் குறுகிய கால அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு இப்படி நடந்து கொள்வது இந்திய இறையாண் மைக்கும் கூட்டாட்சித் தத்துவத் துக்கும் எதிரானது. எனவே, இதனை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறோம் என்றார்.
உண்ணாவிரதம் இருக்கும் விவசாய சங்கத்தினரை தமாகா தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பலராமன், மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவர் ராஜு உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.