‘நீதிமன்றம் கட்சியை வழிநடத்த முடியாது’ என, கோவில்பட்டியில் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை நீதிமன்றம் முடிவு செய்துவிட முடியாது. கட்சியின் தொண்டர்கள் தான் தீர்மானிப்பர். இவர்கள் அந்த பதவியில் இருக்க வேண்டும் என்று கூற நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றம் கட்சியை வழிநடத்த முடியாது.
இந்த தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, கண்டிப்பாக எதிர்க்கட்சி தலைவர் மேல்முறையீடு செய்வார். ஒற்றை தலைமை தான் வேண்டும் என்பது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த கருத்து. எங்களை பொறுத்தவரை பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் தான்” என்றார் அவர்.