குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மோசஸ். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவரது மகள் ஜெனிஃபர். கல் லூரி மாணவி. நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் தனியார் நிறுவனத்தின் 200 கிராம் எடை கொண்ட தயிர் பாக்கெட்டை வாங்கியுள்ளார். தந்தை, மகள் இருவரும் தயிரை சாப்பிட்டுள்ளனர். பின் னர் மீண்டும் தயிரை சாதத்தில் கொட்டியபோது, அதில் கருப்பு நிறத்தில் செத்த அட்டை பூச்சியின் தோல்கள் இருந்துள்ளன. பாக்கெட்டை முழுவதுமாக பிரித்து பார்த்தபோது அதில் மேலும் சில அட்டை பூச்சிகள் செத்து கிடந்தது தெரியவந்தது.
இருவருக்கும் வாந்தி, மயக்கம் தலைசுற்றல் மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின் றனர்.
இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விசாரித்து வருகிறார்.