தமிழகம்

தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஹால்டிக்கெட்: நாளைமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு உதவித்தொகை வழங்கு வதற்காக தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

முதலில் மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும். அந்த வகையில், முதல்கட்ட தேர்வான மாநில அளவிலான தேர்வு, நவம்பர் 5-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் http://www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1 (நாளை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடந்த ஆண்டு வினாத்தாள்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வை தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 232 பேர் அடுத்த கட்ட தேர்வான தேசிய அளவிலான திறனாய்வு தேர்வுக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

SCROLL FOR NEXT