தமிழகம்

இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

‘இந்து இயக்கப் பிரமுகர்களை தாக்கியவர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண் டும்’ என ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தென் தமிழக தலைவர் ஆர்.வீ.எஸ். மாரிமுத்து, வடதமிழக தலைவர் எம்.எல். ராஜா ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தமிழகத்தில் இந்து இயக்கப் பிரமுகர்கள் தொடர்ந்து தாக்கு தலுக்கு உள்ளாவதும், படு கொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. கோவை யில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் படு கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் இந்து முன்னணி நகர செயலாளர் சங்கர் கணேஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். திருவல்லிக்கேணி நகர ஆர்எஸ்எஸ் செயலாளர் நரஹரி கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவத்தில் தொடர்பு டைய குற்றவாளிகளை பிடிக்க தமிழக காவல்துறை எவ்வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. மாறாக, கொலை செய் யப்பட்டவர்களை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகிறது. இதே நிலை நீடிப்பது நல்லதல்ல. எனவே, குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.

SCROLL FOR NEXT