காசியைப் போன்றே லட்டுத் தேரில் சிவலிங்கம் தரிசனம் தரும் அற்புத வைபவம் தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் வேடந்தாங்கல் அருகில் உள்ள ஸ்ரீஅம்ருதபுரியில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டிலிருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் ஸ்ரீஅம்ருதபுரி எனும் ஸ்ரீராமானுஜ யோகவனம் உள்ளது. இத்திருத்தலத்தில் நவகிரக விநாயகர், யோக நரசிம்மர், சீனிவாசப் பெருமாள், ஆண்டாள், அனுமன், கருட பகவான், பதினெட்டு சித்தர்கள் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.
காசியில் ஒவ்வொரு தீபாவளித் திருநாளிலும் லட்டுத் தேரில் மாதா அன்னபூரணியை சேவிப்பது மிகவும் விசேஷமான ஒன்று. இதற்காகப் பலரும் ஆண்டுதோறும் காசி சென்று லட்டுத் தேர் வைபவத்தை நேரில் தரிசிக்கின்றனர். ஆனால், பலரால் பொருளாதாரம், உடல்நிலை போன்ற சில காரணங்களால் காசிக்கு சென்று லட்டுத் தேர் வைபவத்தை தரிசிக்க முடியாமல் வருந்துவதுண்டு.
பக்தர்களின் மனவருத்தத்தைப் போக்கும் விதமாக, இந்த தீபாவளித் திருநாளில் ஸ்ரீஅம்ருதபுரி அன்னபூர்ணாலயத்தில், ஸ்ரீஅன்னபூரணி முன்னிலையில் வெள்ளியிலான மகாதேவ சிவலிங்கம் லட்டுத் தேரில் எழுந்தருள உள்ளார்.
தீபாவளித் திருநாளில் லட்டுத் தேரில் சிவலிங்கத்தை தரிசித்தால் உடல்பிணி, பசிப்பிணி மற்றும் சகல் விதமான சனி தோஷங்களும் நீங்கப்பெறும்.
பக்தர்களின் வசதிக்காக இந்த லட்டுத் தேர் வைபவம் செங்கல்பட்டிலிருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் ஸ்ரீஅம்ருதபுரி எனும் ஸ்ரீராமானுஜ யோகவனத்தில் அக்டோபர் 29-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், அக்டோபர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இரண்டு நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீகார்யம்,
ஸ்ரீஅம்ருதபுரி ராமானுஜ யோகவனம்,
வையாவூர் கிராமம்,
வேடந்தாங்கல்,
செல்பேசி: 93810 77297