தமிழகம்

குரோம்பேட்டை மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: மணிமங்கலத்தில் சுகாதாரத்துறை ஆய்வு

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தார். பொழிச்ச லூரில் 2 குழந்தைகள் பலியான நிலையில் தற்போது, மணிமங்கலத்திலும் நிகழ்ந் துள்ளதால் அப்பகுதி பொது மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.

தாம்பரம் அருகே படப்பை அடுத்த மணிமங்கலம் சுற்றுக் கழனி பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரமேஷ் என்பவரின் மகள் ராஜேஸ்வரி (எ) ஐஸ்வர்யா (18). 4 நாட்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட தால், வீட்டின் அருகில் தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 2 நாட்க ளுக்குப் பிறகும் காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து குரோம் பேட்டை அரசு மருத்துவ மனையில் நேற்று முன்தினம் உள்நோயாளிகளாக சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந் தார். நிலைமை மேலும் மோசமானதால், மேல்சிகிச் சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இளம்பெண் மர்ம காய்ச்ச லால் பலியானதைத் தொடர்ந்து படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறையினர் மணி மங்கலத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மணிமங்கலத்தில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.

SCROLL FOR NEXT