புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் திருநெல்வேலியில் ஒண்டி வீரனின் நினைவு தினமான வரும் 20-ம் தேதி அவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.