தமிழகம்

பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியார் கைது

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே மாண வியை பலாத்காரம் செய்ததாக பாதிரியாரை (உதவி பங்குத் தந்தை) திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உதவி பங்குத்தந்தையாக திருநெல் வேலியைச் சேர்ந்த அந்தோணி கிஷோர்(31) பணிபுரிந்துள்ளார். இவர், அதே ஊரைச் சேர்ந்த திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து இவரை திண் டுக்கல் அருகே உள்ள தாமரைப் பாடி பிஷப் ஹவுஸுக்கு (குரு குல இல்லம்) பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு வரும்போது சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்தோணி கிஷோர். இதுகுறித்து திண்டுக் கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் அந்தோணி கிஷோர் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT