லட்சுமிஸ்ரீ 
தமிழகம்

குரோம்பேட்டை | மாநகர பேருந்து மோதியதில் பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை: குரோம்பேட்டை நெமிலிச்சேரியைச் சேர்ந்த பிரேம்குமாரின் மகள் லட்சுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு சக மாணவிகளுடன் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, குமரன் குன்றம் அருகே வந்தபோது மாணவியின் சைக்கிள் மீது அஸ்தினாபுரத்தில் இருந்து பொழிச்சலூர் செல்லும் மாநகரப் பேருந்து மோதியது. இதி அதே இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தேவகுமார் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் சரணடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால்தான் விபத்து ஏற்படுவதாகவும் அவற்றை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முழக்கமிட்டனர் மாணவியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT