கோப்புப்படம் 
தமிழகம்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6 லட்சம் நிலுவைத் தொகை வசூல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: மாவட்ட சட்ட உதவி மையம் மற்றும் திருவள்ளூர் நகராட்சி இணைந்து நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), ரூ.6 லட்சம் நிலுவைத் தொகை வசூல் ஆனது.

திருவள்ளூர் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகை நிலுவைத் தொகை என ரூ.8 கோடி நிலுவையில் உள்ளது. சொத்துவரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளுதல், நீதிமன்ற வழக்கு தொடுத்தல், குடிநீர் கட்டணம் நிலுவைதாரர்கள் குடிநீர் இணைப்பு துண்டித்தல், குத்தகை நிலுவைதாரர்கள் மீது வழக்கு தொடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் சுமார் 450 பேருக்கு இறுதி சமரச வாய்ப்பாக மாவட்ட சட்ட உதவி மையம் மூலம் அறிவிப்புகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், மாவட்ட சட்ட உதவி மையம் மற்றும் திருவள்ளூர் நகராட்சி இணைந்து லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தை நேற்றுமுன்தினம் நடத்தியது. இதில் 43 பேர் பங்கேற்று தங்கள் தரப்பில் நிலுவை வைத்திருந்த ரூ.6 லட்சத்தை செலுத்தி தங்கள் மீதான நடவடிக்கையை மேற்கொள்வதை தவிர்த்தனர். இதனிடையே நிலுவை செலுத்தாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ஜி.ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT