தமிழகம்

பக்கிங்காம் கால்வாயில் 9 ஆண்டாக நடைபெறும் மேம்பால பணி: 2017 மார்ச்சுக்குள் நிறைவடையும் என அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

பூஞ்சேரி அருகே மாமல்லபுரம் செல்லும் சாலையில், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணி களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து மாமல்லபுரம் நகரப்பகுதிக்குச் செல்லும் சாலையில் பூஞ் சேரி அருகே பக்கிங்காம் கால் வாய் குறுக்கிடுகிறது. இக்கால் வாயின் குறுக்கே வாகன போக்கு வரத்துக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய தரைப்பாலம் ஒன்று அமைக் கப்பட்டது.

இந்த குறுகிய தரைப்பாலம் சுனாமியின்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சேதமடைந் தது. இதனால், நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக தரைப் பாலத்தைச் சீரமைத்தனர். எனினும், தரைப்பாலத்தின் மீது வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றன.

2007-ல் சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் தரைப்பாலத்தின் அருகே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக் கப்பட்டது. பின்னர், பல்வேறு காரணங்களுக்காக திட்டம் மாற்றியமைக்கப்பட்டு கூடுதலாக ரூ.2.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.6.3 கோடி மதிப் பில் மேம்பாலப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இதில், கால்வாயின் குறுக்கே அமையும் கான்கிரீட் மேம்பால பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றன. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் கனமழை காரணமாக பக்கிங்காம் கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால், மேம்பால பணிகள் பாதிக்கப் பட்டன. மேலும், மேம்பாலம் நடுவே அமைக்கப்பட்ட மண்தளத்தில், ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு பணிகள் நிறைவு பெறாமல் தாமதமாகி வருகின்றன.

இதுகுறித்து, மாமல்லபுரம் பகுதிவாசிகள் கூறியதாவது: மாமல்லபுரத்தில் இருந்து பூஞ்சேரிக்குச் செல்ல அமைக்கப் பட்டுள்ள தரைப்பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. பேருந்து அல்லது கனரக வாகனங்கள் வரும்போது எதிரே இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத வகையில் குறுகியதாக உள்ளது. இதனால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.

மாற்றாக அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் எப்போது நிறைவுபெறும் என தெரியாமல் 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இப்பணியை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் கள் கூறினர். இதுகுறித்து, செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கூறிய தாவது: உயர்மட்ட மேம் பாலத்தின் கான்கிரீட் பணிகள் முடிவடைந்துள்ளன. மேம் பாலத்தின் நடுவே உள்ள மண்தளம் மற்றும் மண் சாய்வு தளம் ஆகியவற்றின் பக்கவாட்டு பகுதியில், மண் அரிப்பு மற்றும் சரிவைத் தடுக்கும் வகையில் கற்கள் ஒட்ட ரூ.3.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் தொடங்கப்படும். 2017 மார்ச் மாதத்துக்குள் பணிகள் நிறைவுபெறும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT