தமிழகம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக உதவியாளர் பணிக்கு அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக வுள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பு வோர் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரி வித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத் தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அந்தப் பணியிடத்தை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. பொதுப்பிரிவில், இன சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்தப் பணியிடத்துக்கு விண்ணப் பிக்க விரும்புவோர், 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. இந்த பணியிடத்துக்கு தகுதியுள்ளோர், தங்களது சாதி, முன் அனுபவ சான்று, வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன், ‘துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 600098 (தொலை பேசி எண்:044 - 26252453)’ என்ற முகவரிக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT