தமிழகம்

சாதனையாளர்களை முன்மாதிரியாக கொண்டு வாழ்வில் மாணவிகள் முன்னேற வேண்டும்: எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: சாதனையாளர்களை முன்மாதிரியாக கொண்டு மாணவிகள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றுஎழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தினார்.

75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை ராணி மேரி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் என்சிசி அமைப்பு சார்பில் 'இந்திய சுதந்திரம் @ 75' என்ற தலைப்பில் சிறப்புவிநாடி-வினா நிகழ்ச்சி நேற்றுநடைபெற்றது.

இதில் எழுத்தாளரும், முன்னாள் வருமான வரித் துறை அதிகாரியுமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி நடத்திய விநாடி-வினா போட்டியில் சுமார் 150 மாணவிகள் கலந்துகொண்டனர்.

இவர்களில் 16 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வு பெற்றனர். அதன்பிறகு மாணவிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றஅணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, ‘‘அனைவரும் பொதுநலனில் அக்கறை கொள்ள வேண்டும். முறையாக தர்மநெறியின்படி வாழ்வதில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள், சாதனையாளர்கள் ஆகியோரை முன்மாதிரியாக கொண்டுமுன்னேற வேண்டும். அறிவும், திறமையும் எப்போதும் எவரையும் கைவிடாது. வாழ்நாள் முழுவதும் நம் கூடவே துணையாய் வரும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ராணி மேரி கல்லூரி முதல்வர் பா.உமா மகேஸ்வரி, என்சிசி அலுவலர் ஈஸ்வரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT