சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி, கிரானைட் கற்கள், மேற்கூரைகள் உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. நேற்று காலை 10 மணி அளவில் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் முதலாவது நுழைவுவாயில் பகுதியில் 2 கண்ணாடிகள் திடீரென்று உடைந்து விழுந்தன. அந்த நேரத்தில் பயணிகள் யாரும் வராததால், அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.
உடைந்த கண்ணாடிகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவது இது 68-வது முறை.