தமிழகம்

‘ஜெய்பீம்’ குளஞ்சியப்பன் லுங்கியுடன் புகார் அளிக்க வந்ததால் சென்னை காவல் ஆணையரகத்தில் அனுமதி மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: புகார் அளிக்க லுங்கி கட்டிக் கொண்டு சென்னை காவல் ஆணையரகம் வந்த ‘ஜெய்பீம்’ குளஞ்சியப்பனை காவல் துறையினர் உள்ளே அனுமதி மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினசரி பொதுமக்கள் பலர் புகார் அளிக்க வருவது வழக்கம். இன்று ‘ஜெய்பீம்’ கதையின் நிஜ ராஜாகண்ணுவின் உறவினர் குளஞ்சியப்பன் புகார் அளிக்க காவல் ஆணையரகம் வந்தார்.

அப்போது அவர் லுங்கி கட்டியிருந்த காரணத்தால், அவரை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து எதிரே இருந்த ஒரு கடையில் வேட்டி ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு வந்த பிறகுதான் அவரை காவல் துறையினர் உள்ளே அனுப்பி உள்ளனர். லுங்கி கட்டி வந்த காரணத்தால் காவல் துறையினர் ஒருவரை உள்ளே அனுப்ப மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT