தமிழகம்

புதுச்சேரி அரசுப் பள்ளியில் மாடித் தோட்டம் அமைத்து மாணவர்கள் காய்கறி சாகுபடி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் முதல்முறையாக அரசுப் பள்ளியில் மாடித் தோட் டம் அமைத்து மாணவர்கள் காய்கறிகளை விளைவிக்கின்றனர். இத்துடன் நம்மாழ்வார் மூலிகைத் தோட்டம், கலாம் செம்பருத்தி வனம் ஆகியவற்றையும் பராமரிக் கின்றனர்.

புதுச்சேரி சாரத்தில் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி யின் மாடியில் மாணவர்கள் மாடித் தோட்டத்தை அமைத்துள்ளனர். இயற்கை உரங்களை பயன்படுத்தி கத்தரி, தக்காளி, மிளகாய், அவரை, புதினா உட்பட பல்வேறு காய்கறிகளை சுமார் 150 பைகளில் வளர்த்து வருகின்றனர். 8 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒருவருக்கு தலா 5 பைகள் ஒதுக்கி பராமரித்து வரு கின்றனர்.

கலாம் செம்பருத்தி வனம்

இது தொடர்பாக இப்பள்ளி மாணவர்கள் கூறும்போது, “எங் கள் பள்ளியில் கடந்த 2014-ல் நம்மாழ்வார் மூலிகைத் தோட்டம் அமைத்தோம். அதையடுத்து அப்துல் கலாமுக்கு பிடித்த மலரான செம்பருத்தி பெயரில் கலாம் செம்பருத்தி வனம் அமைத்தோம். பின்னர் புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே முதல் முறையாக 2015-ல் மாடித் தோட் டம் அமைத்தோம். மொத்தம் 150 பைகளில் காய்கறி, கீரை களை வளர்க்கத் தொடங்கினோம். ஒருவருக்கு 5 பைகள் வீதம் பரா மரிக்கிறோம். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். எங்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டு வார்கள். வகுப்பு நேரம் தவிர்த்து இதர நேரங்களில் செடிகளை பராமரிப்போம். விளையும் காய் கறிகளை எங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வோம். அதிகம் இருந் தால் அனைவருக்கும் பகிர்ந்து அளிப்போம்” என்றனர்.

ஒருநிலைப்படும் மனம்

ஆசிரியர்கள் தரப்பில் கூறிய தாவது: தோட்டம் அமைக்க ஆசிரியர்கள் வழிகாட்டினாலும் இங்கு பயிலும் குழந்தைகளே முழு ஆர்வத்துடன் செயல்புரிகிறார்கள். செடிகளுக்கு நீர் ஊற்றி, களை எடுத்து பராமரிப்பதால் அவர்களின் மனமும் ஒருநிலைப்படுகிறது. இயற்கைப் பற்றிய புரிதல் ஏற்படு கிறது. உரமிடாமல் இயற்கையாக காய்கறி விளைவிப்பதால் ஏற்படும் பயனும் அக்குழந்தைகளுக்கு புரி கிறது. குழந்தைகளின் ஆர்வத்தை புரிந்துகொண்ட பல பெற்றோர்கள் இங்கு உள்ள நடைமுறையைப் பார்த்து தங்களின் வீட்டிலும் தோட்டத்தை அமைத்து வருகின் றனர்.

இப்பள்ளியில் உள்ள நாவல் மரத்தில் பழங்கள் ருசியாக இருக் கும். இதனால் அங்கு தொட்டி அமைத்து பழங்கள் தரையில் விழாமல் சேகரித்து தருவோம். அக் கொட்டையை ஓரிடத்தில் விதைத்து நாவல் செடிகளும் வளரத் தொடங் கியுள்ளன. ஆசிரியர்களும், மாண வர்களும் மாறினாலும் இத்தோட்ட மும், விளைச்சலும் தொடரும்” என்கின்றனர்.

SCROLL FOR NEXT