தமிழகம்

‘தி இந்து’ - பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப் பயணம்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ - பொதிகை தொலைக் காட்சி இணைந்து வழங்கும் ‘குறையொன்றுமில்லை’ என்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் இன்று இரவு 9.30 மணிக்கு பொதிகை தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியில் பாலாஜி பஞ்ச ரத்ன மாலா தொகுப்பு பற்றிய விரிவான தகவல்கள் அன்னமாச் சார்யா பாடல்களுடன் இடம்பெறும். மேலும் மதுராஷ்டகம், நாம ராமாயணம் உள்ளிட்ட பாடல்களும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அரிய பல புகைப்படங்களும் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும்.

இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

SCROLL FOR NEXT