தமிழகம்

பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வை 27,500 பேர் எழுதினர்: 40 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை

செய்திப்பிரிவு

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளுக்கான தேர்வை 27,500 பேர் எழுதினர். விண்ணப்பதாரர்களில் 40 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசு பொறி யியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணியிடங்களை நேரடி யாக நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று எழுத்துத் தேர்வை நடத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 11 மாவட்டங்களில் 113 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 950 பேரில் 60 சதவீதம் பேர் மட்டுமே (ஏறத்தாழ 27,500) தேர்வெழுதினர். 40 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

சென்னையில் திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் மேல் நிலைப் பள்ளி, ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோனகன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் வித்யோதயா மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங் களில் தேர்வு நடைபெற்றது. தேர் வெழுத அனுமதிக்கப்பட்ட 5,692 பேரில் 3,366 பேர் தேர்வு எழுதினர். 2,326 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

உதவி பேராசிரியர் தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன. தேர்வு மைய வளாகத்துக்குள் தேர்வர்களுடன் வந்தவர்கள், பத்திரிகை போட்டோகிராபர்கள், தொலைக் காட்சி கேமராமேன்கள் உட்பட வெளிநபர்கள் யாரும் அனுமதிக் கப்படவில்லை. போலீஸாரின் முழு சோதனைக்குப் பின்னரே தேர்வர்கள் தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், எலெக்ட்ரானிக்ஸ் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டி ருந்தது. தேர்வர்கள் கைக்குட்டை கூட கொண்டுசெல்ல அனுமதிக் கப்படவில்லை. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. தேர் வுக் கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஓரிரு நாளில் வெளியிடப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT