தமிழகம்

குரங்கணி - முதுவாக்குடி வழித்தடம் பாரம்பரிய பாதையாக அறிவிக்கப்படுமா?

என்.கணேஷ்ராஜ்

முதல் தலைமுறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சென்ற வழித்தடமான குரங்கணி, முதுவாக் குடி, டாப் ஸ்டேஷன் வழித்தடத்தை பாரம்பரிய பாதையாக அறி விக்க விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கொட்டக் குடி ஊராட்சியில் குரங்கணி, முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன், கொழுக்கு மலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மலைக் கிராமங்களான இங்கு தேயிலை, காபி, கேரட், கோஸ், பீன்ஸ், ஏலக்காய் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

ஆங்கிலேயர்கள் 1870-ம் ஆண்டு வாக்கில் கேரள மாநி லம் தேவிகுளம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில், சின்கோனா மற்றும் தேயிலைச் செடிகளை அறிமுகப்படுத்தி நடவு செய்தனர். அப்போது மலைப்பகுதிகளில் வேலை செய்ய அதிக அளவில் ஆட்கள் தேவைப்பட்டனர்.

இதற்காக, அப்போது திருநெல் வேலி, செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் எஸ் டேட் வேலைக்காக தமிழர்கள் அதிக அளவில் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போதுள்ள போடிமெட்டு வனச்சாலை அப்போது இல் லாததால் குரங்கணி, முதுவாக்குடி, டாப் ஸ்டேஷனுக்கு அடர்ந்த வனப்பகுதியில் அமைக் கப்பட்டிருந்த நடைபாதை வழியே இத்தொழிலாளர்கள் சென்று வந்தனர்.

இந்தச் சாலை 152 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல தலைமுறைகளாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ் விலும், தேயிலை வர்த்தகத்திலும் இந்த வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்த பாதையாகக் கருதப் படுகிறது.

தற்போது இந்த நடைபாதை சிதிலம் அடைந்துள்ளது. இந்த பாதையை பாரம்பரிய பாதையாக அறிவித்து சீரமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:

உலகெங்கும் பாரம்பரியத்தை காக்கவும், மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த வழித்தடத்தை பாரம்பரிய பாதையாக அறிவிக்க வலியுறுத்தி, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.மேலும் டாப் ஸ்டேஷன் அருகே வட்ட வடை, எல்லப்பட்டி, சிட்டி வாரை, செண்டுவாரை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கேரட், பீன்ஸ் விளைச்சல் அதிகமாக உள்ளது.

பாதை இல்லாததால் மூணாறு வழியாக சுற்றி தேனிக்கு விளை பொருட்களை கொண்டு வர வேண்டியுள்ளது. இப்பாதை சீரமைக்கப்பட்டால் சுற்றுலாப் பயணிகளும் குறுகிய தூரத்தில் கொழுக்கு மலையை அடையலாம்.

இதன் மூலம், தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். இதை உணர்ந்துதான், கேரளாவில் உள்ள சுற்றுலா வர்த்தகர்கள் இந்த பாதையை சீரமைக்க விடாமல் இடையூறு செய்து வருகின்றனர் என்றார்.

முதுவாக்குடியைச் சேர்ந்த பழங்குடியினர் கூறுகையில், கொழுக்குமலை கடல் மட்டத்தில் இருந்து 8,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால், டாப் ஸ்டேஷன் 4 ஆயிரம் அடிதான். எனவே பாதையை எளிதாக அமைக்கலாம். இந்தப் பாதை மூணாறு செல்வதற்கான மாற் றுப்பாதையாகவும் இருக்கும் என்றனர்.

SCROLL FOR NEXT