கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளான ஆர்.நவநீத கிருஷ்ணன் மற்றும் எஸ்.ராஜிவ் காந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த அக்டோபர் 11-ம் தேதி எங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக வந்த ஒரு பாடலை முகநூ லில் பதிவு செய்தோம். அதில் தமிழக முதல்வர் குறித்தும், தமிழக அரசின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இருந்தது. இது எங்களுடைய அசல் பதிவல்ல. எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து எங்களின் சமூக வலைத் தளங்களை யும் முடக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். இது சட்டவிரோதமா னது. எனவே போலீஸாரின் நட வடிக்கைக்கு தடை விதிக்க வேண் டும்’’ என அதில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி தனது உத்தரவில், ‘‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தமிழக முதல்வரின் தனிப்பட்ட விஷயம் குறித்தோ அல்லது அவரது உடல் நிலை குறித்தோ அவதூறு பரப்புவதை ஒருபோதும் அனு மதிக்க முடியாது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது.
அதற்காக மற்றவர்களின் தனிப் பட்ட சுதந்திரத்தில் பிறர் தலை யிடக்கூடாது. முதல்வரின் உடல் நிலை குறித்து கருத்து தெரிவிக் கும் அளவிற்கு மனுதாரர்கள் தகுதி வாய்ந்தவர்கள் கிடையாது. மனுதாரர்களை எந்த விதத்திலும் இடையூறு செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் சட்டத் திற்குட்பட்டுத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்’’ என உத்தரவிட்டுள்ளார்.